

புதுடெல்லி டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கூறினார். தொழில்துறை அமைப்பான அசோசேம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுகையில் இதனைக் கூறினார்.
டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் யாவும் செயல்படுத்துவதற்கான கட்டத்தில் உள்ளன. இதனால் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழில்களில் சாதகமான தாக்கம் உருவாகும். பல்வேறு செயலிகள் மற்றும் சேவைகள் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிளவுட் சேமிப்பு, டிஜி லாக்கர் போன்ற வசதிகளை பல லட்சம் மக்கள் தற்போது பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
மை கவர்மெண்ட் செயலி மூலம் பல லட்சம் மக்கள் அரசுடன் உரையாடுகின்றனர். டிஜிட்டல் இந்தியா திட்டம் என்பது அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளையும் ஒரே கூரையின்கீழ் கொண்டுவரக்கூடியது. புதிய யோசனைகளுடன் பலரும் இந்த திட்டத்தின்கீழ் தங்களது பஙளிப்பை செய்கின்றனர் என்றும் கூறினார்.