

முன்னாள் நீதிபதி சந்துருவின் ‘உடையுமா, உடை சர்வாதிகாரம்?’ கட்டுரை அருமை. கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில், தனிமனித உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கலாச்சாரம் என்பது சமுதாயத்தை ஒற்றுமையாக வைத்திருக்க உதவும் சடங்கே தவிர, பிரிவினை உண்டாக்க உருவானதல்ல. சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்த வித ஆடையையும் அணியத் தனிமனிதனுக்கு உரிமை அளிக்க வேண்டும்.
- க. தனசேகரன், வேளச்சேரி.