

தமிழ் மொழிப்பற்று, தமிழ் இலக்கிய இதழ், தமிழுக்கு விருது, ஆர்ப்பாட்டம் இல்லாத அரசியல்வாதி, அளவாகப் பேசப்படும் நிகழ்ச்சிகள்... இவை எல்லாவற்றையும்விட... தமிழில் பேசும் பள்ளி மாணவர்கள் தமிழ்நாட்டில் கனவாகி, கருகிப்போனவை எல்லாம் கனடாவில் துளிர்விட்டுச் செழித்து நற்பயிராக வளர்ந்து நிற்பது, தமிழுக்கு நீண்ட ஆயுள் உள்ளது என்னும் மன நிம்மதியை அளிக்கிறது. கனடாவின் நிலப்பரப்பைப் போலத் தமிழர்களின் தமிழ்ப் பரப்பும் நீண்டு விசாலமாகப் பரவியுள்ளதைப் படித்தபோது நன்றி பெருக்கெடுத்தது.
- எஸ். எஸ். ரவிக்குமார், கிருஷ்ணகிரி.