

தி இந்து’வின் உயிர்மூச்சு இணைப்பிதழில் மூன்று கட்டுரைகளை தக்க விதத்தில் பிரசுரித்து, எண்ண ஓட்டத்தில் புதிய சிந்தனைகளை வளர்க்கிறீர்கள். ஒரு அமித் ஜெத்வா தன்னுயிரை ஈந்து, சிங்கங்களைக் காத்துவிட்டார்.
அந்த நல்ல மனிதரின் கொலை, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி, கிர் காடுகளின் சிங்கங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்துவிட்டது. ஆனால், ஆயிரக் கணக்கில் நாடு முழுவதும் எத்தனையோ விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டும், நம் அரசின் வேளாண் துறைகள் அவர்களின் குறைகளைத் தீர்க்க முழு முயற்சியும் எடுத்தபாடில்லை.
தண்ணீருக்கு, மின்சக்திக்கு, விதை கொள்முதலுக்கு என்று எல்லாவற்றுக்கும் பாடுபடுவது போதாதென்று, விலை நிர்ணயத்திலும் சொல்லொணாத் துயரங்களை அரசின் கொள்கைகளாலும் இடைத்தரகர்களாலும் அனுபவிக்கிறார்கள்.
இவற்றை சீர்செய்ய அரசு திருச்செல்வம் போன்றவர்களின் தொழில்நுட்ப அறிவையும் அனுபவங்களையும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை உடனே ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
- மெய்யப்பன் சாந்தா, மதுரை.