

எந்தக் காரணத்துக்காக கட்ஜு இந்தக் குற்றச்சாட்டை இப்போது எழுப்புகிறார் என்பதைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்ற நீதிபதி சந்துருவின் கருத்தை ஏற்க இயலவில்லை. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளனின் வாக்குமூலத்தை மாற்றி எழுதியதாக, 22 வருடங்கள் கழித்து சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி தியாகராஜன் சொன்னது போன்றதுதான், நீதிபதி கட்ஜுவின் இந்த தாமதமான கூற்றும்.
‘தாமதமாக கிடைக்கும் நீதி அநீதிக்கு சமம்’ என்ற சொற்றொடரை அடிக்கடிப் பயன்படுத்தும் நீதித்துறையிலேயே இப்படியென்றால் மற்ற துறைகளைப் பற்றிக் கூறவே வேண்டாம்.
- வீ. சக்திவேல், தே.கல்லுப்பட்டி.