

முதல்வர் சொல்வது முற்றிலும் உண்மை. இந்த இலவச மின்சாரத்துக்கு மிகப் பெரிய வரலாறு இருக்கிறது. ஒரு முறை காமராஜரும் குமரிஅனந்தனும் காரில் போய்க்கொண்டிருந்தபோது, விவசாயி ஒருவர் ஒற்றை மின்விளக்கைப் போட்டுக்கொண்டு வயலுக்குக் காவல் காத்துக்கொண்டிருந்தாரம்.
அதைப் பார்த்துப் பரவசமாகிப்போன காமராஜர், ''இந்த மின்சாரத்தை இலவசமாக விவசாயிகளுக்குக் கொடுத்தால் என்ன?'' என்று குமரிஅனந்தனிடம் கேட்க, அவர் இசைந்து பரிசீலித்திருக்கிறார். ஆனால், காமராஜர் ஆட்சியில் இது கனவுத் திட்டமாகவே இருந்தது.
அதன் பின் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் குமரிஅனந்தனின் தொடர் வலியுறுத்தலின் பேரில், எம்ஜிஆர் 1984-ம் ஆண்டு சுதந்திர தின விழா மேடையில் குமரிஅனந்தனை வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அறிவித்தாராம். இதற்கு திமுக சொந்தம் கொண்டாடுவது கூடாது.
- அர்ஜுன், 'தி இந்து' இணையதளம் வழியாக…