

‘போர்கள் ஓய்வதில்லை’ கட்டுரை படித்தேன். முதல் உலகப் போரில் உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ளாததால்தான் இரண்டாம் உலகப் போர் மூண்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னராவது உலக நாடுகள் பாடம் கற்றுக்கொண்டனவா என்றால், அதுதான் இல்லை.
உலகெங்கிலும் ஏதாவது ஓர் இடத்தில் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மீண்டும் உலகப் போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், உலகெங்கிலும் உள்ள மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.