

குருமூர்த்தி எழுதிய ‘சமூக நீதிக்கு இதுவும் ஒரு வழி' என்ற கட்டுரையின் மொழியாக்கம் படித்தேன். இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்தியடிகளால் வர்ணிக்கப்பட்ட கிராமங்கள்தான் இன்றளவும் மூலப்பொருட்களுக்கான உற்பத்தி மையங்களாக இருக்கின்றன. பெரிய நிறுவனங்கள் ‘அவுட் சோர்சிங்' என்ற பெயரில் இந்த மையங்களிடம் குறைந்த செலவில் வேலையை வாங்கிக்கொண்டு, அதில் தங்கள் நிறுவனத்தின் பெயரையும் இலச்சினையையும் பொறித்துக்கொள்கின்றன. 90% வேலைவாய்ப்பை வழங்கும் சிறு, குறு நிறுவனங்கள் ஏன் தங்களுக்குள் உள்ள அமைப்பின் மூலம் பொருட்களைச் சந்தைப்படுத்தக் கூடாது? இதன் மூலம் வங்கிகளில் கடன் பெறுவதும் எளிதாகுமே?
- அ. மயில்சாமி, சூலூர்.