

‘திருச்சியில் கழிவு ஓடையாக மாறிய காவேரி’ என்ற தலைப்பில் வந்த செய்தி நெஞ்சைப் பிசைகிறது. மேல சிந்தாமணியில் எங்கள் மாமியார் வீட்டின் பின்புறம்தான் காவேரி ஆறு படித்துறை. நான் வளர்ந்தது எல்லாம் மேல சிந்தாமணியில்தான். சிறுவயது முதல் காவேரியைப் பார்த்து வளர்ந்தவள் நான். என்னைப் போன்றவளுக்குத்தான் தெரியும் காவேரியின் சீரழிவுபற்றி.
யாராவது காவேரியைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. அதைத் தீர்க்கும் வண்ணம் ‘தி இந்து’வில் வந்த செய்தி கொஞ்சம் நிம்மதி தருகிறது.
- கே. சரண்யா நிகேஷ்குமார், காட்டூர்.