

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் அளவுக்காவது கட்டமைப்பில், பயிற்றுமுறையில், மாணவர் நலனில் என எல்லாவற்றிலும் நன்கு விளங்கினால்தான் படிப்படியான முன்னேற்றத்துடன் அவை பெற்றோருடைய மனங்களில் மாற்றம் நடத்தி மாணவர்கள் சேர்ப்பில் உற்சாகம் ஏற்படுத்தும். அப்போதுதான் கல்வி, இலவசக் கட்டாயக் கல்வியை கிராமம்தோறும் ஏற்றி வைத்த காமராஜரின் உன்னத எண்ணம் நிறைவேறும். அரசும் மக்களுமாக ஒருமித்து முயன்றால் இந்த இலக்கு எட்டக் கூடியதே.
- கே.என். இராமகிருஷ்ணன், சென்னை-26.