

இசல்தீன் அபுலாய்ஷ் கட்டுரையைப் படித்தேன். கண்கள் பனித்துவிட்டன. உலகெங்கிலும் உள்ள மானுடம் இதைத்தான் விரும்புகிறது. தன் வலிகளைச் சமாதானத்துக்கான அறைகூவலாக விடும் மனித நேயம் மகத்தானது.
உலக நாடுகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று. பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்றுகுவித்து எதை வெற்றியெனக் கொண்டாடப் போகிறோம்.
- இல.ஜெகதீஷ், கிருஷ்ணகிரி.