

ஆனந்த ஜோதி பகுதியில் சைதன்யா எழுதிய தத்துவ விசாரம் அருமை. புறத்தோற்றங்களுக்கு மயங்கிப் பழகிவிட்ட நம்மை விழிப்புறச் செய்யும் அனுபவக் கட்டுரை அது. தெரிந்த கதைகளின் ஊடாகத் தெரிந்துகொள்ள வேண்டிய தத்துவப்பொருளை அழகாக விளக்குகிறது கட்டுரை. “புறத்தோற்றம் முக்கியமல்ல, தோற்றத்துக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை உணர்வதே முக்கியம்” எனும் சைதன்யாவின் எளிய வரிகளில் ஒளிந்திருக்கும் அற்புத அனுபவத்தைப் புரிந்துகொள்பவரால் தன்னை அறிய முடியும் என்பது உறுதி.
- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.