

உணவு, மருத்துவம், கல்வி மூன்றும் இலவசமாக, தரமாக வழங்கப்பட வேண்டும். முன்பு ரொம்ப காலமாக அப்படித்தான் இருந்தது. ஆனால், இன்று இந்த மூன்றும்தான் மக்களை ஏமாற்றிப் பணம் கொள்ளையடிப்பதில் முதல் இடத்தில் இருக்கின்றன.
இன்று அரசாங்கமும் சரி, மக்களும் சரி, நீதி, நேர்மை மறந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவலமான வாழ்க்கை பழகிவிட்டது. மருத்துவமனையில் டாக்டர் சிகிச்சை மட்டும்தான் செய்ய வேண்டும். டெஸ்ட் லேப், ஸ்கேன், முக்கியமாக மருந்துக் கடை வைத்திருக்கக் கூடாது.
எந்த லேப், ஸ்கேன் சென்டர்-ல் இருந்தும் கமிஷன் போனால், டாக்டர் கைது செய்யப்பட வேண்டும். பணம் சம்பாதிப்பதில் அரக்கர்களை விட மோசமானவர்கள், டாக்டர்களும் கல்வி நிறுவனம் வைத்து மோசம் செய்பவர்களும்.
- பாலா, ‘தி இந்து’ இணையதளம் வழியாக…