அனைத்துப் பள்ளியிலும் காலை உணவு: முன்னெடுக்குமா அரசு?
தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில், ஒன்பது மாணவர்கள் வீட்டில் சோறு இல்லை என்பதற்காகச் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை நேரில் சென்றிருந்தபோது அறிந்தேன்.
ஒரு பள்ளியிலேயே இப்படியெனில், தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள பள்ளிகளில், காலை உணவு கிடைக்காமல் பசித்த வயிறுடன் வரும் மாணவ, மாணவியர் எத்தனை பேரோ?
தமிழகப் பள்ளி மாணவர்களின் இத்தகைய நிலையைப் புரிந்துகொண்டு, தமிழகத்தின் நூற்றாண்டு மரபின் தொடர்ச்சியாகப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைத் தமிழக அரசு அமல்படுத்தியிருப்பது பெரும் போற்றுதலுக்குரிய முன்னெடுப்பு.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்டிருக்கும் காலை உணவுத் திட்டம், அனைத்து மாணவர்களுக்குமானதாக விரிவுபடுத்த வேண்டும். ‘தனி ஒருவருக்கு உணவு இல்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றான் பாரதி. குறைந்தபட்சம் மாணவர்கள் பசி இல்லாமல் கல்வி பயிலும் நிலைமையையாவது உருவாக்குவோம்.
- ஜி.செல்வா, சென்னை.
