

முதியவர்களின் பரிதாப நிலையை யும் முதுமையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், ‘சுறா, செல்ஃபி மற்றும் முதுமை’ கட்டுரையில் மிக அருமையாக விவரித்திருக்கிறார் சூசன் மூர். வாழ்க்கைத் துணையை இழந்த பின்னர், முதியவர்களின் வாழ்வில் சோகம் மேலும் அதிகரித்துவிடுகிறது. தங்களை முழுமையாகப் புரிந்துகொண்டவர்களின் அருகமை அரவணைப்பும் கிடைக்காமல் அவர்கள் மனம் உடைந்துவிடுகிறார்கள்.
முதியவர்களிடம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அனுபவப் பொக்கிஷங்கள் அவர்கள். முதுமை, உடல்நலக் கோளாறு போன்ற விஷயங்கள் அவர்களைத் துவளச் செய்துவிடுகின்றன. அவர்களது தனிமைத் துயரையும், வேதனையையும் போக்கும் வகையில் அவர்களை அரவணைத்துக்கொள்வது இளைய தலைமுறையினரின் கடமை!
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.