முதலீட்டுக்காகக் கெஞ்ச வேண்டுமா?

முதலீட்டுக்காகக் கெஞ்ச வேண்டுமா?
Updated on
1 min read

மோடியின் அமெரிக்க விஜயம் ஊடகங்களுக்கு நல்விருந்தாக அமைந்திருப்பது வியப்பல்ல. நிறைய அந்நிய முதலீட்டுக்கு வாக்குறுதிகள் பெற்றுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்திய வம்சாவளியினர் திரண்டுவந்து அவருக்கு மகோன்னத வரவேற்பு கொடுத்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் நம் நாட்டு ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் குறைந்த கட்டணத்தில் நிறைந்த அறிவு பெற்றவர்கள்.

ஒவ்வொருவர் கல்விக்கும் இந்திய அரசு பல லட்சம் செலவழித்துள்ளதால்தான் அவர்கள் இன்று உயர்நிலைக்கு வந்துள்ளனர். இதை உணர்ந்து தம் தாயகத்தின் வளர்ச்சிக்கு ஒரு பிரதமரது வேண்டுதல் இல்லாமலேயே உதவுவது அவர்களது முதற்கடன். எந்த சீனப் பிரதமரும் வெளிநாட்டவரது முதலீடு வேண்டி இத்தகைய சுற்றுப்பயணம் மேற்கொண்டதில்லை. இருந்தபோதிலும் அந்நிய முதலீடு தானாக வந்து குவிந்து சீனா இன்று ஒரு பொருளாதார வல்லரசாகத் திகழ்கிறது. கேளாமலேயே சீனா எப்படி முதலீடுகள் பெற்றது, கெஞ்சிக் கூத்தாடி நமது பிரதமர் முதலீடு கேட்பானேன் எனும் கேள்விகள் தீவிர ஆய்வுக்கு உட்பட்டவை.

- ச.சீ. இராஜகோபாலன், சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in