

குவைத்தில் ஓட்டுநர் பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட இளைஞர் சதாம் உசேனைப் பற்றிய செய்தியை ‘தி இந்து’ வெளியிட்டது. அரபுக்காரர்களிடமிருந்து அவர் மீட்கப்பட்டாலும், நாடு திரும்ப டிக்கெட்டுக்கூடப் பணம் இல்லாமல் தவித்ததைப் பற்றியும் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இந்தச் செய்திகளால் அவருக்கு டிக்கெட் கிடைக்கவும் சிலரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ‘தி இந்து’வின் அக்கறை மிகுந்த சேவையால் அந்த இளைஞர் நாடு திரும்ப வழி பிறந்திருக்கிறது. அதற்காக மனமார்ந்த நன்றிகள்!
- நந்தகோபால், தஞ்சாவூர்.