

நாட்டுப்புறவியலாளர் அ.கா.பெருமாள் எழுதிய ‘அடிகோலப்படுகேனே...' கட்டுரை, பண்டைய நாட்டுப்புறப் பாடல்கள் குடிக்கு எதிரான கருத்துக்களை எவ்வளவு வலுவாகப் பதிவு செய்துள்ளன என்பதை வெளிப்படுத்தியது.
அன்று கள் குடிப்போருக்கு இருந்த மரியாதையைக் ‘கள்ளு குடிக்கப் போகாதேடா கோமாளிப் பயலே… ஏமாளிப் பயலே' என்ற வரிகள் தெளிவாய்ப் படம்பிடித்துக் காட்டின.
மதுவுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடும் இவ்வேளையில், இப்படியான கட்டுரைகளை வெளியிடும் ‘தி இந்து'வின் பணி பாராட்டுக்குரியது. மதுவுக்கு எதிரான ‘மெல்லத் தமிழன் இனி...' தொடரின் இரண்டாம் பாகம், மதுவினால் ஏற்படும் பாதிப்புகளைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் காண்பது கூடுதல் சிறப்பு.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.