

வன்முறையைப் பிரயோகித்துதான் பெரும்பாலான ஆபாசப் படங்கள் எடுக்கப்படுவதாக ‘சுதந்திரமும் பொறுப்பும்’ கட்டுரையில் விவாதிக்கப்பட்டது. ஆனால், இத்தகைய வன்முறைக்குப் பணிந்துபோகக் காரணம் என்னவென்று யோசிக்க வேண்டும். வறுமையினால், பாலியல் காட்சிகள் எப்படி எடுக்கப் பட்டாலும் ஒத்துழைக்கும் அவல நிலை உள்ளது. ஒரு முறை சிக்கிவிட்டால் திரும்ப முடியாத பாதையில் அடைபட வேண்டிய நிலை. இறுதியில் மனுஷ்ய புத்திரன் சொல்வதைப் போல ‘நான் பாலியல் படங்களைப் பார்க்க மாட்டேன்' என்று சொல்வதற்கு ஒழுக்கவியல் சார்ந்த காரணங்களைவிட, மானுட நீதி சார்ந்த காரணங்கள்’தான் நிறையவே இருக்கின்றன.
- மா. பாரதிமுத்து நாயகம்,விக்கரமசிங்கபுரம்.