

நான் கல்லூரிப் படிப்புக்காக 1999-ம் ஆண்டு என் கனவு நகரமான சென்னையில் முதலில் கால் பதித்தபோது, என் மனம் மகிழ்ச்சியால் சிறகு கட்டிப் பறந்தது.
முதல் நாளாக பாரிமுனையிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகத்துக்குப் பேருந்தில் பயணம் செய்தபோது நேப்பியர் பாலத்தைப் பார்த்தேன். அதன் கீழே ஓடும் கூவம் நதி கடலில் கலப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அந்த அதிர்ச்சி அன்று முழுவதும் கொஞ்சமும் குறையவில்லை. பிரியமான ஒன்றை இழந்ததுபோல் வேதனை வாட்டியது. உல்லாசப் படகுப் பயணம் சென்ற அந்தப் பழைய சென்னை மீண்டும் வராதா என ஏக்கம் வருகின்றது.
- கேப்டன் யாசீன், திண்டுக்கல்.