

‘போராடுவதற்கு இன்னொரு ஆயுதம்’ கட்டுரையில், சோபியா அஷ்ரஃபின் ‘கொடைக் கானல் வோன்ட்' ராப் பாடலை, மாற்றுமுறைத் தீர்வுக்கான அம்சமாகவே பார்க்க வேண்டி உள்ளது. கொடைக்கானலின் பாதிப்பை அழுத்தமாக இந்தப் பாடல் எடுத்துச் சென்றுள்ளது.
அந்த நிறுவனம் இந்தப் பிரச்சினையில் அக்கறைகொண்டு தீர்வளிக்க முன்வந்துள்ளது.
இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்ட கொடைக்கானலுக்கும் பரிகாரம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் சென்று பெறக் கூடிய பரிகாரத்தை அஹிம்சை முறையில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இந்தப் பாடல். அது மட்டுமல்லாமல், கலையின் நோக்கம் எது என்பது குறித்தும் நமக்கு ஒரு புரிதலை இந்தப் பாடல் ஏற்படுத்தியுள்ளது.
நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்று அஹிம்சை. அந்த அற வழிப்போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. அதற்காக நித்யானந் ஜெயராமன், சோபியா அஷ்ரஃப் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.
- வ.லோ. சந்தோஷ்,ஈரோடு.