

‘சென்னை ஏன் புழுங்குகிறது?’ அருமையான பதிவு. நான் தென்தமிழகத்தைச் சேர்ந்தவன். 11 ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். தினமும் அடையாறு பாலத்தைக் கடந்துதான் அலுவலகம் செல்வேன். அந்த ஆறு ஒரு காலத்தில் எப்படித் தன் கம்பீரம் குறையாமல் பெருக்கெடுத்து எப்படி ஓடியிருக்கும் என்பதைக் கற்பனை செய்வது உண்டு. ஆற்றைக் கடக்கும்போதெல்லாம், அதன் தற்போதைய நிலையை நினைத்து வருந்தாத நாளில்லை.
ஆடி மாதம் என்பதால், புறநகர்ப் பகுதி அம்மன் கோயில்களில் திருவிழாக் கோலம். சாலைகளில் பந்தல் அமைத்துக் கொண்டாடுவது தலைமுறை வழக்கம். அதில் தவறில்லை. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பணி நிமித்தமாகப் புறநகா்ப் பகுகளில் குடி பெயர்ந்தவர்களால் இந்த விழாக்களால் ஏற்படும் சிறு போக்குவரத்துச் சிரமங்களைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. இது காலத்தின் பொறுமையற்ற அவசரத்தன்மையையே காட்டுகிறது.
என் சொந்த ஊரைப் போன்றே சென்னையில் என் வீட்டில் தொட்டிகளில் செடிகள் வளர்த்துவருகிறேன். இவை நான் இந்த சென்னைப் பூமியின் மீது வைத்துள்ள ஒரு பிரியத்தால்தான். இதே போன்று அனைவரும் மாற வேண்டும்.
- சரவணன், மின்னஞ்சல் வழியாக…