

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டத் திருத்தங்களை எதிர்க்க மக்கள் தயாராக வேண்டும் என்பதை அக்கறையுடன் வலியுறுத்தியது ‘வருகிறது அடுத்த தலையிடி!’ (15. 06.2015) என்ற தலையங்கம்.
வளர்ச்சிக்கான முழக்கங்களை முன் வைத்து ஆட்சிக்கு வந்த மத்திய அரசு, பணக்காரர்கள், நிலச்சுவான்தார் கள், கார்ப்பரேட்டுகள் போன்றோரிடம் மட்டும்தான் தங்கள் மனிதாபிமானத் தைக் காட்டுகிறது.
பெரும்பான்மைச் சமூகத்தினராக இருந்தாலும் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் போன் றோரின் துன்பங்களும் துயரங்களும் இவர்களிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
- மருதம் செல்வா,திருப்பூர்.