நல்லதுக்கு முன்னுரிமை

நல்லதுக்கு முன்னுரிமை
Updated on
1 min read

அப்துல் கலாமின் பதிவு: ‘நான் டெல் அவிவ் விருந்தினராக இஸ்ரேல் சென்றபோது, இரவில் நான் தங்கியுள்ள ஹோட்டல் சமீபம் ஒரு குண்டு விழுந்தது.

மறுநாள் நான் பத்திரிகை பார்த்தபோது இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்குமென்று நினைத்தேன். பத்திரிகையைத் திறந்தவுடன் நான் பார்த்தது பெரிய எழுத்துக்களில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ரக நெல்லைப் பற்றிய கட்டுரை.

இது வியந்துபோனேன். நமது பத்திரிகைகளும் ஏன் அது மாதிரி செய்யக் கூடாது. கொலை, கொள்ளை, விபத்து போன்ற செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தரமுள்ள செய்திகளை எங்கோ மூலையில் போடுகிறார்களே ஏன்? சாமானிய மக்கள் நாட்டில் நடக்கும் நல்ல செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், விரக்தி அடைந்து விடுவார்கள்.

மோடி போகும்போது இதையெல்லாம் பார்த்து நாமும் முன்னேற வழி செய்ய வேண்டும்.’

- சுந்தரராஜன், இணையதளம் வழியாக…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in