பிளவுபட்ட ஆந்திர பிரதேசமும் உருவாகிய தலைநகர தலைவலியும்

பிளவுபட்ட ஆந்திர பிரதேசமும் உருவாகிய தலைநகர தலைவலியும்
Updated on
1 min read

பிளவுபட்ட சகோதரத்துவம் என்ற தலையங்கமும் தலைநகரத்துத் தலைவலி என்ற கட்டுரையும் படித்தேன்.

ஆந்திரம் என்று இரண்டாகப் பிளவுபட்டதோ அன்றே இந்தத் தலைவலி ஆரம்பமாகிவிட்டது. மக்களின் நலன் என்பது இந்த அரசியல்வாதிகளுக்கு இரண்டாம்பட்சம்தான்.

தங்களின் நலன், தங்கள் கட்சியின் எதிர்காலம் இரண்டும்தான் அவர்களின் முதல் நோக்கம்.

பற்றாக்குறை வருமானத்தில் அமராவதி தலைநகர் அமைக்க கோடிக் கணக்கில் ஆந்திர அரசு செலவிடுகிறது. உபரி வருமானமுள்ள தெலங்கானா அரசு வீண் செலவுகளை மிகவும் ஆடம்பரமாகச் செய்கிறது.

மக்களின் அத்தியாவசியத் தேவை பற்றி இரு மாநில முதல்வர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இருவரும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

- பி.கே. ஜீவன், கும்பகோணம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in