

தொழிலாளர் நலச் சட்டங்களில் அவர்களைப் பாதிக்கும் வகையில் பெருமளவு திருத்தங்கள் கொண்டுவர எத்தனிக்கும் மத்திய அரசின் முயற்சிகள் கண்டனத்துக்குரியவை (வருகிறது அடுத்த தலையிடி, ஜூன் 15).
தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு முன்னோடியாக பாஜக ஆளும் ராஜஸ்தானில் அம்மாநில அரசு தொழிலாளர் நலச் சட்டங்களில் அவர்களுக்குக் கடும் பாதிப்பை விளைவிக்கும் வகையில் சில திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.
தொழிலாளர்களையும் அவர்களது எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கிவிட்டு, இவர்கள் எதைச் சாதிக்கப்போகிறார்கள்.
மேலும், தொழிற்சாலைகளில் ஆய்வாளர்கள் சோதனைகள் நடத்துவதிலும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது, தொழில் வளர்ச்சிக்குக் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ‘நிலம் கையகப்படுத்தும் மசோதா’வால் நாட்டில் விவசாயமும் விவசாயிகளும், தொழிலாளர் விரோதச் சட்டங்களால் தொழிலாளர்கள் வாழ்க்கையும் மீளாப் படுகுழியில் தள்ளப்படும் அபாயம் உள்ளது.
- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.