

இதுவரை இயற்கை வனம், காட்டுயிர் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கிய தமிழக வனத்துறை, இனிமேல் ரூ. 50 ஆயிரம் கட்டணம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
இது அரசு உதவித்தொகையுடன் ஆராய்ச்சி மேற்கொள்ளும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.
பக்கத்து மாநிலம் கேரளத்தில் இதுபோன்றதொரு உத்தரவு இல்லை. இந்த உத்தரவு இயற்கையை மேம்படுத்தும் ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் ஆர்வலர்களின் முயற்சிக்கு மட்டுமல்ல, அழிந்துவரும் உயிர்கள் மற்றும் பயிர்களை அறிந்துகொள்ள உதவும் முயற்சிக்கும் தடைக்கல்லாக அமையும்.
- கி. ரெங்கராஜன், சென்னை.