

டி.எம். கிருஷ்ணாவின் ‘ஐஐடி என்றால் எல்லோருக்கும் மேலானவர்களா?’ என்ற கட்டுரை, அறிவியல் எவ்வாறு சமூகத்திலிருந்து மேம்பட்டதாக, தவறாகக் காணப்படுகிறது என விளக்கியிருந்தார்.
மக்களால் அறிவியல் சமூகத்திடமிருந்து பிரிக்கப்படுவதில்லை. உண்மையில், ஆளும் வர்க்கம்தான் அறிவியலை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்துள்ளது.
அரசு இந்நிறுவனங் களை, பன்னாட்டு நிறுவனங்களுக் கான இயந்திர விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கான கல்வி தருபவையாகப் பயன்படுத்துகிறது.
ஆகவேதான் அங்கே சமூகம் சார்ந்த கருத்துகள் தடுக்கப்படுகின்றன. நிலப்பிரபுத்துவ சமூகத்திடமிருந்து அறிவியலை முதலாளித்துவம் விடுவித்தது.
முதலாளித்துவச் சிறையிலிருந்து அறிவியலை மக்கள் விடுதலை செய்வர். கட்டுரையாளர் குறிப்பிட்ட யதார்த்த உலகோடும் மக்களோடும் அறிவியல் ஒன்றிணையும் காலம், மக்கள் அரசு உள்ள காலமே!
- ஜ. வெண்ணிலா,மின்னஞ்சல் வழியாக…