

சூரிய வணக்கத்தை எதிர்ப்போர் கடலில் குதிப்பீர்: பாஜக எம்.பி-யின் இந்த செய்தி மாபெரும் சர்ச்சை ஆகியுள்ளது.
பள்ளிகளில் இஸ்லாமிய சீறாப்புராணமும் கிறித்தவ தேம்பாவணியும் கட்டாய மனப்பாடச் செய்யுள்களாக உள்ளதை இந்துக்கள் துளிகூட எதிர்க்கவில்லையே.
அந்த விசால மனது எங்கே? சிறுவர் உடல்- மனவளத்துக்கு யோகாவைக் கற்றுக் கொடுக்கவே கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம்? எத்தனையோ விளக்கங்கள் கொடுத்தும் நடப்பது பாஜக ஆட்சி என்பதற்காக நல்லதை எதிர்ப்பதுதான் அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதற்காக அவர் கடலில் குதிக்கச் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாது. யோகா பயிற்றுவிக்கப்படும் 150 நாடுகளில் பல இஸ்லாமிய நாடுகளும் உண்டு.
- கே. ‘தி இந்து’ இணையம் வழியாக…