

கல்வி அமைப்புகுறித்த முனைவர் வசந்தி தேவியின் கட்டுரை ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. ஆங்கில வழிக் கல்விதான் சிறந்தது என்ற மனோபாவம் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
கல்விக் கட்டணம் அதிகமாக இருந்தால்தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வசூலிக்கும் பள்ளிகளில் ஆசிரியர்களின் நிலையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும்.
பணம் அதற்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது. அது நம் நாட்டுக்கு நல்லதல்ல. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றால், பின் எளியவர்களின் கதிதான் என்ன?
- ரா. பொன்முத்தையா,தூத்துக்குடி.