அரசின் உதவி வேண்டும்

அரசின் உதவி வேண்டும்
Updated on
1 min read

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களில் காச நோய், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,000 தமிழக அரசு வழங்கிவந்தது. தற்போது அந்த உதவித்தொகையும் நிதிப் பற்றாக்குறையைக் காரணம்காட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

வெறும் மருந்து மாத்திரைகளால் மட்டுமே காச நோயைத் தடுத்துவிட முடியாது. மக்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவும் கிடைக்க வேண்டும்.

காச நோய் பரவுவதற்கான முக்கியக் காரணங்களில் ஊட்டச்சத்துக் குறைபாடும் ஒன்று. ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது என சமீபத்தில் ஜ.நா. அறிக்கை கூறுகிறது.

உலகிலுள்ள 120 கோடி ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில்தான் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. விவசாயிகளின் தற்கொலைக்கும் பட்டினிச் சாவுகளுக்கும் எந்தக் கொள்கைகள் காரணமோ அதே கொள்கைகள்தான் ஏழை, எளிய மக்களின் ஊட்டச்சத்தின்மைக்கும், காச நோய் போன்ற கொள்ளை நோய்கள் பரவுவதற்கும் காரணமாக உள்ளன.

நிரூபிக்கப்பட்ட 100 எய்ட்ஸ் நோயாளிகளில் 80 நபர்களுக்கு காச நோய் உள்ளது. 100 எய்ட்ஸ் நோயாளிகள் இறப்பார்கள் எனில், அவர்களில் 85 நபர்கள் உயிர் இழப்பதற்குக் காரணம் காச நோய் ஆகும்.

எனவே, காச நோய், மற்றும் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உதவித்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மா. சேரலாதன், தர்மபுரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in