

இங்கிலாந்தில் கறிக்கோழிகளை வளர்க்கும் விதம் பற்றிய கட்டுரை, இந்தியாவுக்கும் அப்படியே பொருந்தும். லாப நோக்கத்துக்காக கறிக்கோழிகளைக் குறைவான காலத்தில் எடை அதிகமாக்கச் செலுத்தப்படும் மருந்துகள், கோழிக்கறி சாப்பிடும் மனிதர்களையும் பாதிக்கிறது.
தொழில்துறையிலும் மனிதவளத்திலும் முன்னேறிய இங்கிலாந்தின் நிலையே இப்படியென்றால், இந்திய கோழிப் பண்ணைகளின் நிலையை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
கோழிகளுக்குக் கொடுக்கப்படும் நோய் எதிர்ப்புச்சக்தி மருந்து இறைச்சியில் கலந்து, சாப்பிடும் நம் உடலிலும் கலக்கிறது. அதனால் நோய்வாய்ப்பட்டவர்கள் மருந்து சாப்பிடும்போது பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.
இதற்காக கோழிக் கறியைத் தவிர்க்க வேண்டியதில்லை. இயற்கையாக வளரும் நாட்டுக்கோழிகளுக்கு மாறினால் உடலுக்கும் சூழலுக்கும் நல்லது.
எஸ். ஹரிஹரன்,‘தி இந்து’ இணையதளம் வழியாக…