

சாதிக் கொடுமைகளைக் களைய தமிழகம் முழுவதும் வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு என்ற செய்தியைப் படித்தேன்.
பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் உள்ளவரை சாதி உணர்வே இல்லாமல் அருகருகே அமர்ந்து கல்வி கற்கின்றனர். பள்ளியில் உள்ள ஆவணங்களில்தான் சாதி எழுத்து வடிவில் இருக்கிறது.
சாதியின் பெயரால் சங்கங்கள், கட்சிகள் நடத்தும் தலைவர்களின் நாக்கிலும் நெஞ்சிலும் சாதி ஆழமாக வேரூன்றி வாழ்கிறது. நாட்டில் புலிகளைச் சுதந்திரமாக உலவ விட்டுவிட்டு, ஆடுகளிடம், ‘நீங்கள் பத்திரமாக இருக்க வேண்டும்… தெரியுதா' என புத்தி சொல்வதைப் போல இருக்கிறது, பள்ளிகளில் நடத்தப்படும் வீதி நாடகங்கள்.
- கி. நாவுக்கரசன்,ராணிப்பேட்டை.