

பாஜக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவேறப்போகும் இந்த நேரத்தில் மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தலைமை தகவல் ஆணையர்(சிஐசி), தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர்(சிவிசி) மற்றும் லோக்பால் போன்ற மிக முக்கியமான பொறுப்புகளுக்குப் பல மாதங்களாகத் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை.
தகவல் பெறும் உரிமை (ஆர்டிஐ) சட்ட வரம்புக்குள் பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சரவை ஆகியவை வராதது போன்றவை சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
வளர்ச்சி, வெளிப்படையான நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு போன்ற வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்திருக்கும் பாஜக தற்போது எதிர்க் கட்சிகளின் விமர்சனத்துக்குள்ளாகியிருப்பதில் ஆச்சரியமில்லை.
- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.