

அரசுப் பள்ளியும் சமுதாயமும் ச.மாடசாமியின் ‘தப்பித்த குரங்குகள்!' இன்றைய கல்விச் சூழலைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி.
ஒரு நாட்டின் எதிர் காலம் வகுப்பறையில் வடிவமைக்கப்படுவது உண்மையானால், மாணவர்களுக்குச் சுதந்திர வெளியும், சொந்த முகமும் நிலையானதாக இருக்க வேண்டும்.
அப்பணியைக் கல்விக்கூடங்கள் வர்த்தகமயமாக்கி வரும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையிலும் அரசுப் பள்ளிகள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது நிதர்சனம்! எனவே, அரசுப் பள்ளிகளை ஆதரிக்கும் நம் நிலை சிறு ஒலியாக இல்லாமல் ஓங்காரமாகட்டும்.
- பொ. ராமுசெல்வம்,பழனி.