

வாஸந்தி எழுதிய ‘அந்த நாள் வந்திடாதோ?’ கட்டுரை அருமை. அந்தக் கேள்வியின் அவசியமும், இன்றைக்கு நடைபெறும் அவலங்களும், நம் வீட்டுக் குழந்தைகள் படும் அல்லல்களையும் மிக அழகாகப் படம்பிடித்துக் காண்பித்துள்ளார் கட்டுரையாளர்.
அவர் தன்னுடைய பள்ளிக் காலத்துக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் நம்மை அழைத்துச் சென்றார். அவ்வளவு தூரம் ஏன்? கால் நூற்றாண்டுக்கு முன்பு பள்ளி இறுதியாண்டு முடித்த நம்மில் பலர், எத்தனை இன்பமாக இருந்தோம். சோர்வில்லாமல் தேர்வுகளைச் சந்தித்தோம்.
தோல்விகளையும் துணிவோடு எதிர்கொண்டோம். ஆனால், இன்றைய நம் பிள்ளைகள் ஒவ்வொரு நிமிடத்தையும் அச்சத்தோடும், பதற்றத்தோடுமே கழிக்கின்றனர்.
அவர்களின் குழந்தைத்தனத்தை மொத்தமாக அபகரித்து எதை சாதிக்கப்போகிறோம் நாம்.
- வ.சி. வளவன்,குழந்தை நலச் செயல்பாட்டாளர், சென்னை.