

‘அழிவின் விளிம்பில் கோவில் காடுகள்’ கட்டுரை படித்தேன். கோயில் என்றால் இன்று பக்தி என்று மட்டுமே நினைக்கிறோம்.
ஆனால், அந்தக் காலத்தில் கோயில்கள் சமுதாயக் கூடங்களாக இருந்திருக்கின்றன. கோயில்களில்தான் ஊரின் முக்கியப் பிரச்சினைகளைக் கூடிப் பேசுவர். ஆடல், பாடல் உள்ளிட்ட கலைகளும் அங்குதான் வளர்த்தெடுக்கப்பட்டன.
கோயில் என்றாலே அக்கோயிலின் மரமும் (தல விருட்சம்), குளமும் (தீர்த்தமும்) முக்கியமானவை. சிவனின் பல கோயில்கள் முன்பு வனமாக இருந்தன. கடம்பவனமே இன்றைய மதுரை. தில்லைவனமே (தில்லை-ஆலமரம்) இன்றைய சிதம்பரம்.
திருமறைக்காடே இன்றைய வேதாரண்யம். நெல்லிவனமே இன்றைய திருவாவினன்குடி (பழனி). தலவிருட்சங்களையும், குளங்களையும் பாதுகாக்க மறந்துபோன அவலத்தி லிருந்து இனியாவது விடுபட முயற்சிப்போம்!
- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.