

‘போகும் வழியும் ஒரு பள்ளிக்கூடம்தான்’ - என்னுடைய பள்ளி நாட்களைக் கண்முன் நிறுத்திய அருமையான கட்டுரை.
1.அண்மைப் பள்ளிகள் என்னும் வழிமுறையைக் கட்டாய மாக்குவது. 2.சொந்த வாகனங்களில் தனித்தனியாகக் குழந்தைகளை அழைத்துச் சென்று, அழைத்து வருவதை நிறுத்திவிட்டு, பள்ளி வாகனங்களில் பிற குழந்தைகளோடு சேர்ந்து பள்ளிக்குச் சென்று வருவதை ஊக்குவித்தல்.
இன்றைக்கும்கூட வழிநடைப் பயணமும் கற்பிக்கும் காரணியாக மாற இந்த இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றலாம். மேலும், இதனால், எரிபொருள் வீணடிப்பும் வாகன நெரிசலும் பெருமளவில் குறையும். சிந்திப்பார்களா?
- சுந்தரம்,ஆத்தூர்.