

இன்றைய இந்தியா - பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், அணு ஆராய்ச்சி என சகல துறைகளிலும் மேலை நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி அடைய அடிப்படை அமைத்தவர் நேரு.
அவர் கொண்டுவந்த ஐந்தாண்டுத் திட்டம், பஞ்சசீலம் மற்றும் அணிசாராக் கொள்கைகள் நேருவின் மணிமகுடத்தில் மாணிக்கக்கல்லாக இருப்பவை.
நேரு எந்த காலத்திலும் வெட்டி அரசியல் பேசியவரல்ல. அடிப்படையில், அவர் ஒரு நாத்திகராக இருந்தபோதிலும், அதை அவரது தனிப்பட்ட கொள்கையாகவே வைத்திருந்தார். ஒருபோதும் அதைப் பிரச்சாரத்துக்காக அவர் கையாண்டதில்லை. நேருவுக்குப் பிறகு ஒரு தீர்க்கமான, தொலைநோக்குத் திட்டமுள்ள ஒரு தலைவர் இந்தியாவுக்குக் கிட்டவில்லை!
– சுகுமார், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…