நல்லுறவு வேண்டும்

நல்லுறவு வேண்டும்
Updated on
1 min read

கிருஷ்ணா நீர் தொடர்பான கட்டுரைகள் பல செய்திகளை உள்ளடக்கியுள்ளன.

இரு மாநிலங்களுக்குள் நல்லுறவு இருந்தால் மக்கள் நன்மைக்கான திட்டங்களை எளிதாக நிறைவேற்றலாம். திரையுலக நண்பர்கள் எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும் மாநில முதல்வர்களாக இருந்ததால் தெலுங்கு-கங்கைத் திட்டம் செயல்பட்டது.

ஆனால், இன்று மோதல் போக்கைக் கடைப்பிடிக்கவே முற்படுகிறார்கள். நடுவணரசை நிர்ப்பந்தித்தும், நீதிமன்றங்களை நாடியும் ஒரு காரியத்தைச் சாதிக்கலாம் என்று நினைப்பது அறிவுடமையல்ல என்பது எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்படாது ஆண்டுக் கணக்கில் நீண்டு செல்வதே விளக்கும்.

தமிழ்நாட்டில் அண்டை மாநிலங்களோடு நல்லுறவு ஏற்படா வண்ணம் தொடர் கூச்சல் போடுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் பேருந்துகளை எரிப்பதுமான செயல்களில் ஈடுபடுவது எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்பதே வரலாறு.

- ச.சீ. இராஜகோபாலன்,

சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in