

தமிழ் இதழியல் சூழலில், கல்வி சார்ந்த ஒரு கருத்தை மையப்படுத்தி, தொடர்ச்சியான பதிவுகள் உணர்வோடு எழுதப்படுவது மிகுந்த மகிழ்வைத் தருகிறது.
ஜெயமோகனின், ‘அஜிதனும் அரசுப் பள்ளியும்’ கட்டுரை மிகப் பெரிய தாக்கத்தை அறிவுச்சூழலில் ஏற்படுத்தியிருக்கிறது.
கோடை விடுமுறை முடிந்து, தன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களின் மனதில் சில மாற்றங்களையேனும் இந்தத் தொடர் ஏற்படுத்தினால், ஒரு பெரிய மாற்றத்தின் சிறு அறிகுறியாய் அது இருக்கும். வழக்கம்போலத் தகுந்த நேரத்தில், தேவையான செய்தியைப் பதிந்த ‘தி இந்து’ நாளிதழுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
ச. பூபதி நரேந்திரன்,சமூகவியலாளர்.