

மும்பை மருத்துவமனையில் மரபணுப் பிரச்சினைக்கான அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் சிறுமிக்கு ரூ. 1.5 லட்சம் நன்கொடையாக வழங்கியிருக்கும் இந்தியர்களின் செயல் பாராட்டுக்குரியது.
நமது அண்டை நாட்டைச் சேர்ந்த சிறுமிக்கு நம்மவர்கள் உதவியிருக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எப்படியானதாக இருந்தாலும் அடிப்படையில் அனைத்து மக்களும் அன்பானவர்கள்தான் என்பதற்கு இது உதாரணம்.
- கா. நித்யானந்தன்,மதுரை.