

செல்வி. சத்யா எழுதிய ‘பெண்களே முகம் சுளிக்கலாமா?’ கட்டுரையில் அவர் எழுதியது உண்மையே.
பெண்களின் மதிப்பும் முன்னேற்றமும் தாழ்த்தப்படுவதற்குப் பெண்களே காரணமாகியிருப்பது வருத்தத்துக்குரியது. இன்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பல தடைகளையும் இழிவுகளையும் அனுபவிக்க வேண்டியுள்ளது.
மீறுபவர்களை அக்குடும்பப் பெண்களே கடிந்துகொள்கிறார்கள். மாற்றம் தொடங்க வேண்டியது பெண்களிடமிருந்துதான் என்று கூறும் சத்யாவின் துணிவையும் முற்போக்குத் தன்மையையும் கண்டு பொறாமை கொள்கிறேன். இவரைப் போன்ற முற்போக்கான பெண்கள்தான் பெண் சமுதாய முன்னேற்றதுக்கு வழிவகுக்கிறார்கள்.
- இர. லாவண்யா,
மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவி, காஞ்சிபுரம்.