

மதுரை அருகே ஒரு பெண் கணவரையும் அவரது குடும்பத்தினரையும் தீ வைத்து எரித்துக்கொன்ற செய்தி அதிர்ச்சியளித்தது.
சில குடும்பத் தகராறுகள் குற்றச் செயல்கள் வரை சென்றுவிடுவது திருமண உறவு குறித்த அடிப்படைப் புரிதல்கள் இல்லாததையே காட்டுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் சமூக நிகழ்வுகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம். இதற்கு கட்டுப்பெட்டித்தனமான நடைமுறைகளை விட்டு வெளியில் வர வேண்டியது மிக முக்கியம்.
- ஆர். கணேசன்,திருநெல்வேலி.