

மோடியின் தேஜகூ அரசு ஓராண்டை நிறைவு செய்திருக்கும் நிலையில், அரசின் செயல்பாடுகள்குறித்த சித்தார்த் பாட்டியாவின் கட்டுரை நடுநிலையாளர்களின் எண்ணங்களை அழகாகப் பிரதிபலித்தது.
ஒரு வருந்தத்தக்க ஆனால் நிதர்சனமான உண்மை என்னவென்றால், கடந்த ஓராண்டில் சொல்லிக்கொள்ளும் வகையில் இந்த அரசு எந்தச் சாதனையையும் புரியவில்லை.
கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் முழுப் பலனை மக்கள் அனுபவிக்கவிடாமல் கலால் வரியை உயர்த்தியது, விலைவாசி குறைய நடவடிக்கைகள் எடுக்காதது, சமூக நலத் திட்டங்களுக்கு நிதியைக் குறைத்தது, சிறுபான்மை சமூகத்தினரிடம் அச்சத்தை உருவாக்கிவருவது போன்ற பல உதாரணங்களை இந்த அரசின் மிகப்பெரும் குறைபாடுகளாகப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், ஏழை, எளிய மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் தராத நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைத் திணிக்கப் பிரயத்தனப்படுவது போன்றவை இந்த அரசுக்கு எந்த விதத்திலும் பெருமை சேர்க்கவில்லை. கட்டுரையாளர் கூறுவதுபோல வெற்று கோஷங்களை வைத்தே வண்டியை ஒட்டிவிட முடியாது என்பதை பாஜக அரசு உணர வேண்டும்.
- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.