

‘வெற்றிக்கொடி’ பகுதி உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இளங்கலை படித்தாலும் ஜெயிக்கலாம் என்னும் கட்டுரையில் உளவியல்பற்றிக் குறிப்பிட்டமைக்கு நன்றி.
பெரும்பாலானவர்களுக்கு உளவியல் படிப்புபற்றிய விழிப்புணர்வு இல்லை. பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் இப்பாடம் இல்லை.
தனியார் கல்லூரிகளில் குறிப்பாக பெண்கள் கல்லூரிகளில் உள்ளது. மேலும், இதை அறிவியல் பாடமாகக் கற்பிக் கிறோம். வேலைவாய்ப்பும் இப்போது அதிகம். அனைத்துத் துறைகளிலும் உளவியல் படித்தவர்களுக்கு வாய்ப்புண்டு. இப்போது பிசியோதெரபி போல சைக்கோதெரபி என்னும் பாடப்பிரிவு உள்ளது.
- பேராசிரியர் ஜி. ராஜமோகன்,உளவியல் துறை (மாநிலக் கல்லூரி), சென்னை.