

ஒரு வீட்டுக் குப்பையிலிருந்து தினசரி 3 ரூபாய் வருமானம் கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது.
சட்டசபைகளில் நலத்திட்டங்கள் எனப் பல தீர்மானங்களை நிறைவேற்றி, அதை அடுத்த ஆட்சியில் நவீனப்படுத்திக் கொண்டிருக்கும் அரசியல் தந்திரங்களை மீறிய இவரது செயல், இந்தியக் குடிமகனாய் என்னைப் பெருமைகொள்ளச் செய்கிறது.
இவர் செய்யும் செயல்களால் குப்பைகளும் கோபுரங்களாகும் என்ற கூற்று உண்மையாகும். இது முதலீடு இல்லாது கிடைக்கும் வருவாய். எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய வரம். உள்ளாட்சி அமைப்புகள் வரி விதிப்பில் அக்கறை காட்டாமல், இதுபோன்ற நடைமுறைக்குச் சாத்தியமான செயல்களில் ஈடுபட்டால் நிறைய வருவாயை ஈட்டலாம். நோயற்ற வாழ்வை அளிக்கலாம். சுகாதாரம் காக்கப்படும்.
- தனசேகரன், தரணம்பேட்டை,