

தங்க. ஜெயராமனின் ‘உப்புக் கழுதைகள் எப்படித் தொலைந்தன?’ கட்டுரையில் புது நெல்லின் முதல் செலவாக உப்பு வாங்கும் வழக்கம் எடுத்துக்கொண்ட மாற்று வடிவம் எதுவும் தென்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அதன் தொடர்ச்சியாகச் சில இடங்களில் இன்னும் அதை நினைவுபடுத்துவதுபோலச் சில நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருகிகின்றன.
தங்க. ஜெயராமனின் தேடலுக்குச் சாட்சியமாக… என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவர் தன் சம்பளத்தின் முதல் செலவாக உப்பு வாங்குவதை வழக்கமாகக்கொண்டிருந்தார். உடன் பணிபுரியும் நண்பர்களுக்கும் அதைக் கடைப்பிடிக்கும்படி அவர் அறிவுறுத்துவார்.
இதனால், செலவுகள் குறைந்து சேமிப்பு பெருகும் என்பது அவரது நம்பிக்கை. தொ. பரமசிவனின் ‘பண்பாட்டு அசைவுகள்’ நூலில் படித்ததாக நினைவு - கிரேக்கத்தில் வேலைக்குக் கூலியாக உப்பு வழங்கப்பட்டது.
Salt என்னும் அடிச்சொல்லில் இருந்தே Salary என்ற சொல் வந்தது என்றும், தமிழகத்திலும் கூலியாக உப்பளத்திலிருந்தே உப்பு கொடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ச. அருளமுது,பாகாயம்.