

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைக் குற்றமற்றவர் என கர்நாடக நீதிமன்றம் சொல்லிவிட்டது.
இன்னும் ஒரு ஆண்டு அவர் முதல்வராக இருக்க சட்டபூர்வமாக எந்தத் தடையும் இல்லை. இந்தத் தீர்ப்பு சரியா அல்லது தவறா என்கின்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். அவர் உண்மையிலேயே தவறு செய்திருந்தால் மக்கள் நிச்சயமாக அடுத்த தேர்தலில் அவரைத் தண்டித்துவிடுவார்கள்.
மக்கள் மன்றத்தின் மேல் ஏன் எதிர்க் கட்சிகளுக்கு இந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது? எதிர்க் கட்சிகளின் இந்தப் போக்கு ஜனநாயகத்தைக் காக்கவா அல்லது தங்களது சுயலாபத்துக்காகவா?
- கோபாலகிருஷ்ணன்,சென்னை.