

பேராசிரியர் நா. மணி எழுதிய ‘சமூக வளர்ச்சிக்கு அரசுப் பள்ளிகளே அடிப்படை!' கட்டுரை படித்தேன்.
அனைத்துச் சமூக மாணவர்களிடையேயும் சமத்துவத்தை ஏற்படுத்தியது அரசுப் பள்ளிகளே. தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சீருடை அணிந்து வந்தாலும், அவர்கள் பயன்படுத்தும் புத்தகப்பை, தண்ணீர் பாட்டில், நோட்டு, பேனாக்கள் போன்றவற்றிலும் அவர்கள் கொண்டுவரும் உணவுகளிலும் ஏழை-பணக்காரர் என்ற பெரிய வேறுபாடு அப்பட்டமாகத் தெரியும்.
ஆனால், அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் வேறுபாடு தெரிவதில்லை. வேறுபாடற்ற நிலையை உண்டாக்கி சமூக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் அரசுப் பள்ளிகளின் உண்மை நிலையை உரக்கச் சொன்ன ‘நம் கல்வி... நம் உரிமை...' கட்டுரை அருமை!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.